ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை சார்பாக சென்று வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்த மாதவன் ராஜ்குமாருக்கு 'விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்' என எழுதப்பட்ட தேநீர் கோப்பையை விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கியுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 27,28,29 திகதிகளில் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற மாதவன் ராஜ்குமார் 30 நாடுகளை எதிர்க்கொண்டு 3 ஆவது இடத்தைத் தட்டிச்சென்று நவம்பர் 11 ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க தகுதிபெற்று நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய ராஜ்குமாருக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் தேநீர் கோப்பையை பரிசாக கொடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளியின் மகனாக அவதரித்து இலங்கைக்கே பெருமை ஈட்டிக்கொடுத்த வீரனுக்கு தேநீர் கோப்பையை வழங்கியமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ராஜ்குமாருக்கு உரிய கௌரவத்தை வழங்கி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டுமென்பதே அனைவரதும் வேண்டுகோளாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment