கொழும்பில் இருந்து அருவக்காட்டிற்கு குப்பை ஏற்றிச் சென்ற லொறிகள் மீது மீண்டும் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த லொறிகள் மீது வனாத்துவில்லு பகுதியில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கல்வீச்சுத் தாக்குதலில், லொறிகள் சில சேதமடைந்துள்ளன.
குறித்த லொறிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தபோதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் குப்பை கொண்டு சென்ற லொறிகள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டுசெல்வதற்கு புத்தளம் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment