பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் ஊடகப்பிரிவு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கோட்டாவின் உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.
அந்த வகையில் பொதுஜன பெரமுன வேட்பாளரான கோட்டா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையிலேயே கோட்டாவின் ஊடகப் பேச்சாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்குள் காணப்படும் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment