கல்வி முறையைப் பலப்படுத்துவதன் மூலம் சமயக் கல்வி பலமடையும். நாட்டின் கல்வித்துறையை பலப்படுத்த வேண்டுமாயின் நாம் எமது சமயக் கல்விகளை பலப்படுத்த வேண்டியுள்ளதாகவும், நாட்டிலுள்ள பெளத்த வழிபாட்டுத் தளங்களை விருத்தி செய்ய கடந்த சில வருடங்களாக அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் துறைமுகங்கள் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
கம்பெரலிய மத்திய கலாசார நிதியம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அதிகார சபை ஆகியன பல்வேறு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெலிகம, ஹல்லல பெளத்த விகாரையில் அண்மையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கலாசார நிதியம் பிரதமரின் கீழ் உள்ளது. அதன் கீழேயே விகாரைகளின் அபிவிருத்தி நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன. தெற்கு அபிவிருத்தி அதிகார சபை பிள்ளைகளின் கல்வியின் பக்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
இன்று அதிகமான மாணவர்கள் சமயப் பாடசாலைகளுக்கு வராமல் இருப்பதற்குக் காரணமாக அமைவது மேலதிக வகுப்புகளாகும். எமது கல்வி முறையைப் பலப்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் நாம் முன்னேறிச் செல்ல சமயக் கல்வி அவசியம். கல்விமுறையை பலப்படுத்துவதன் மூலம் சமயக் கல்வி பலமடையும்.
பெளத்த சமயம் பற்றி எமக்கு எமது பெற்றோர்கள் வழிகாட்டினர். அதற்கு நேரம் இருந்தது. ஆனால் இன்று இதனைக் கற்க பிள்ளைகளுக்குநேரம் இல்லை. எமது கல்வி முறை மேலும் பலம் பெற கலாசார முறைமை அபிவிருத்தியடைய வேண்டும் என்றார்.
வெலிகம நிருபர்
No comments:
Post a Comment