இலங்கை நிருவாக சேவையில் வெற்றிடமாக காணப்படும் 257 வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொது நிருவாக அமைச்சு கோரியுள்ளது.
இலங்கை நிருவாக சேவை தரம் மூன்றில் காணப்படும் மேற்படி வெற்றிடங்களில் 203 பேர் திறந்த போட்டிப் பரீட்சை மூலமும் 54 பேர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமும் தெரிவு செய்யப்பட்டு நிரப்பப்படும் எனவும் பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது.
திறந்த போட்டிப் பரீட்சைக்கு 22 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்ட பல்கலைக்கழக பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். இரு தடவைகளுக்கு மேல் திறந்த போட்டிப் பரீட்சைக்கு தோற்ற முடியாது.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தற்போது அரச சேவையில் அல்லது மாகாண அரச சேவையில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த பல்கலைக்கழக பட்டதாரியான ஒருவர் எம்.என். அல்லது எஸ்.எல். சம்பள குறியீட்டில் சம்பளம் பெறும் அரச ஊழியர் தோற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது நிருபர்
No comments:
Post a Comment