கல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒற்றுமையாகத் தீர்மானமெடுக்க வேண்டும். ஒற்றுமைப்படாவிட்டால் ஏதாவது 2 பிரதேசங்கள் இணங்கிப்போகவும் அடுத்தது மிக மோசமாக தனிமைப்படவும் நேரும் என பிரபல சமூக ஆய்வாளரும் சர்வதேச எழுத்தாளருமான வ.ஐ.ச ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
மதிப்புக்குரிய தலைவர்கள் சம்பந்தரும் ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் அவசரமாகப் பேசினால் மட்டுமே பொது முடிவை எட்ட முடியும். அல்லது அரசு முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.
தோழர் ஹக்கீமை பொறுத்து கல்முனை மட்டுமல்ல அவர் சுமக்கும் பிரச்சினை. கிழக்கு முஸ்லிம்களை சிங்களவர் தமிழரிடமிருந்து மட்டுமல்ல தெற்க்கு முஸ்லிம்களிடமிருந்தும் தனிமைப்படாமல் காப்பாற்றும் கயிற்றில் நடக்கும் பணியை இன்றய சூழலில் அவரைத் தவிர இன்னொருவரால் நிறைவேற்ற முடியாது. அதேபோல அதிக அங்கத்துவம் இருந்தும் முதலமைச்சர் பதவியை விட்டுத்தரும் மனம் சம்பந்தரை தவிர வேறு யாருக்குமில்லை.
சமந்தர் ஐயாவும் தோழர் ஹக்கீமும் ஏற்கனவே ஒத்துக்கொண்டபடி எல்லை நிர்ணயத்தை பேசி முடித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
ஒற்றுமையாக இணங்கிப் போகாமல் அரசு தீர்வைக் கொண்டுவந்தால் அம்பாறையிலும் திருகோணமலையிலும் சிங்கள அரசாங்க அதிபர் இருப்பதுபோல கிழக்கு மாகாணத்தில் பிழவுபட்ட தமிழர் முஸ்லிம்கள் ஆதரவுடன் சிங்கள முதல் அமைச்சர் பதவி ஏற்க்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்பதை அடித்து சொல்ல முடியும் என்றார்.
No comments:
Post a Comment