அம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெனாண்டோவுக்கு ஐந்து வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தை பார்வையிடச் சென்ற ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கற்கள் மற்றும் பொல்களால் தாக்குதல் விளைவித்தமை மற்றும் விளையாட்டு துப்பாக்கியின் மூலம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஏப்ரல் 17 ஆம் திகதி இடம்பெற்ற இவ்வழக்கில் அம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ மற்றும் முதலாவது பிரதிவாதியான ஹேமசிறி பரணமான்ன ஆகிய இருவருக்கும் சிறைத்தண்டனை விதித்து, அம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி சாமர தென்னகோன் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுகள் 29 தொடர்பில் முதலாவது மற்றும் ஐந்தாவது பிரதிவாதிகள் குற்றவாளியாக இனம்காணப்பட்ட அம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ மற்றும் முதலாவது பிரதிவாதியான ஹேமசிறி பரணமான்னவுக்கு ரூபா 60,000 அபராதம் நியமிக்கப்பட்டது.
அத்துடன் முறைப்பாட்டாளர்களுக்கு ரூபா 13 இலட்சம் இழப்பீடு செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment