பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மடிகணினிகள் இலஞ்சமாக வழங்கப் பட்டவையா? என்பது தொடர்பில் சபாநாயகர் விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் கோரினர்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. இதனையடுத்து எதிர்க்கட்சி எம்.பி. நிமல் லான்ஷா ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் பாராளுமன்றம் ஊழல்கள் நிறைந்தது என்றும் பாராளுமன்றத்தில் இலஞ்சம் இடம்பெறுவதாகக் கூறியதுடன் 225 எம்.பி.க்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மடிகணினிகள் இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பில் சபாநாயகர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நிமல் லான்ஷா எம்.பி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சி எம்.பி விமல் வீரவன்ச, நான் எனது மேசையில் வைக்கப்பட்டுள்ள மடிகணினியை ஒருநாள் கூட திறந்து பார்த்ததில்லை. இதற்கு பாராளுமன்ற இரகசிய குறியீட்டு எண்ணும் தரப்பட்டுள்ளது. உண்மையில் இது இலஞ்சமாக தரப்பட்டதோ தெரியவில்லை. எனவே இது தொடர்பில் விளக்கம் வேண்டும் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment