யாழ். மாதகல் பகுதியில் 122.5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் இளவாலை பொலிஸ் அதிகாரிகளுடன் கடற்படையினர் இணைந்து நேற்று (31) தேடுதல் நடத்தியபோதே, பற்றையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் வழியாக குறித்த கேரள கஞ்சா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என, கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment