மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடல் பிரதேசத்திலிருந்து வடமேல் திசையில், கோவிலம் கலங்கரை விளக்கத்தை அண்டிய கடற்பகுதியில் கடற்படையினர் நேற்று (31) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரோலர் படகுடன் குறித்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் ரோலர் படகுடன் இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, கடற்படைத் தளமான இலங்கை கடற்படை கப்பல் எலாரா தளத்திற்கு குறித்த மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களுக்கான மருத்துவ பரிசோதனையின் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ். மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment