கொள்ளுப்பிட்டியிலுள்ள சுவிற்ஸர்லாந்து தூதரகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவர், தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (31) பகல் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளையை சேர்ந்த 21 வயதுடைய பி.டி.பி.எம். வீரசேகர என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விமானப்படை தலைமையகத்தில் சேவையில் இணைக்கப்பட்ட விமானப்படை வீரர் தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.
பாரிய காயங்களுக்குள்ளான அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மரணமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment