ருஹுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

ருஹுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டது

ருஹுணு பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் காலவரையின்றி மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் மீது மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன தெரிவித்தார்.

நேற்று (30) இரவு எலியகந்த மாணவர் விடுதியினுள் பகிடிவதை இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நடத்திய சோதனையின்போது, ஒரு சில மாணவர்களால் வேந்தர் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, ரூஹுணு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தை கால வரையறையின்றி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று (31) மாலை 6.00 மணிக்கு முன்னர் வெல்லமடம வளாகத்திலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment