இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய பெருந்தோட்டப் பயிராக கரும்புச் செய்கையை பெயரிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நேற்றைய தினம் (30) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது இலங்கையில் சீனி பாவனை வருடாந்தம் 670,000 மெற்றிக்தொன்னாகும். இத்தேவையின் 91 சதவீதமானவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. இதற்காக வருடமொன்றிற்கு செலவிடப்படும் நிதி 350 மில்லியன் அமெரிக்க டொலராகும். மேலும் 2020 ஆம் ஆண்டளவில் சீனியின் தேவை 700,000 மெற்றிக்தொன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கரும்பு உற்பத்தி செய்வதற்காக மொணராகலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 104,000 காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment