முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து சந்தோசம் அடையும் கூட்டத்தினருக்கு தேசிய அரசியல் பற்றியோ முஸ்லிம் மக்களின் நலன் குறித்தோ எவ்விதமான ஆர்வமும் கிடையாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து சந்தோசம் அடையும் கூட்டத்தினருக்கு தேசிய அரசியல் பற்றியோ முஸ்லிம் மக்களின் நலன் குறித்தோ எவ்விதமான ஆர்வமும் கிடையாது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைமை அமைச்சுப் பதவியேற்றது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது வேண்டுகோளுக்கு அமைவாக மாத்திரமே என முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எ.எல்.எம்.நஷீர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட தீர்மானத்திற்கு மாற்றமாக அமைச்சுபதவி ஏற்கப்பட்டுள்ளதா என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், எமது கட்சியின் உயர்பீடத்தில் பொருத்தமான தீர்மானத்தினை மேற்கொண்டு கட்சியையும், சமூகத்தையும் வழிநடாத்தும் பொறுப்பு தலைவரிடம் உள்ளது. சமூகத்தின் தேவைகள் குறித்து முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வழமை போன்று முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து சந்தோசம் அடையும் கூட்டத்தினர் அதை தொடர்ந்தும் செய்து கொண்டே இருக்கின்றார்கள். அவர்களுக்கு தேசிய அரசியல் பற்றியோ முஸ்லிம் மக்களின் நலன் குறித்தோ எவ்விதமான ஆர்வமும் கிடையாது.

விசேடமாக அமைச்சரவையில் எமது தலைமையின் தேவைப்பாடு கடந்த மூன்று மாதங்களுக்குள் மிக பலமாக உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பிலான விவகாரங்களும் மிகவும் இறுக்கமான நிலைக்கு வந்துள்ளன.

மாத்திரமின்றி, நமது மக்களின் காணி விவகாரங்களையும், பிரதேச சபைகள், செயலகங்கள் என்பன தொடர்பிலான தீர்க்கமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன. கல்முனை செயலகம், வாழைச்சேனை சபை தொடர்பிலாக பேசப்பட்டுள்ளது. தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழ் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் வஜிர அபேவர்த்தன மிக சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே முஸ்லிம்களின் நிலை குறித்து பேசுபவர்களின் அழுத்தங்களையும் கொண்டே இந்த அமைச்சுப் பதவி ஏற்பு இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment