படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு நேற்று (04) முற்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளார். 

பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை கட்டளைத்தளபதி வரவேற்றதுடன் யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் நல்லிணக்க ரீதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆளுநருக்கு விளக்கமளித்தார். 
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கமைவாக பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதையும் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் படையினரால் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை பாராட்டிய ஆளுநர், மேலதிகமாக தற்போது பாதுகாப்பு படையினரிடம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பாதுகாப்பு கேந்திர ஸ்தானத்தில் அக்காணிகள் இருக்கும் பட்சத்தில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவற்றிற்கு மாற்றீடான நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ். மாவட்டத்தில் காணப்படும் குறித்த காணிப் பிரச்சினைகளை விரைவில் முடிவிற்கு கொண்டுவருமாறும் ஆளுநர் கட்டளைத்தளபதியிடம் கோரிக்கை விடுத்தார். 

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment