விஷட செய்தியாளர்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது வியாபாரம் நிமித்தம் சந்திவெளி கிராமத்திற்கு சென்ற வேளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி காவத்தமுளையை சேர்ந்த செயினுலாப்தீன் ராசிக் (வயது - 43) என்பவருக்கு வியாபார கொடுக்கல் வாங்கள் தொடர்பில் சந்திவெளி பிரதேசத்தை சேர்ந்த சின்னபாலா என்ற நபர் நேற்று மாலை சந்திவெளிக்கு வருகை தருமாரு தொலைபேசியில் அழைத்ததாகவும் தான் சந்திவெளி வைத்தியசாலைக்கு முன்பாக நின்று உறியவரை தொடர்பு கொண்ட போது தான் மகளை மேலதிக வகுப்பு அழைத்து செல்வதாகவும் அவ்விடத்தில் நிற்குமாரும் தான் வருவதாகவும் கூறிச் சென்றார்.
அந்த வேளையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த ஒருவர் (இவர் அரச உத்தியோகத்தர்) உங்களுக்கு இங்கு என்ன வேளை என்று கேட்டு தன்னை தலைக்கவசத்தால் தாக்கியதாகவும் அவருடன் அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து தாக்கியதாகவும் நான் சந்திவெளி பொலிசுக்கு வந்து பொலிஸாரை அழைத்து சென்றவேளை அவர்கள் தலைமறைவாகிவிட்டதாவும் தனது பேசில் இருந்த 16100 பணமும் தனது மோட்டார் சைக்கிளும் அவ்விடத்தில் இல்லை என்று பாதிக்கப்பட்ட செயினுலாப்தீன் ராசிக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment