மோப்ப நாய்களுக்கு போதைப் பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

மோப்ப நாய்களுக்கு போதைப் பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

கொக்கெய்ன், ​ஹெரோயின் ஆகிய போதைப் பொருள் கடத்தல்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. இதற்காக 70 பொலிஸ் மோப்ப நாய்ககள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவில் 222 நாய்கள் காணப்படுவதுடன் அவற்றில் 70 நாய்களே, போதைப் பொருள் கடத்தலை சுற்றிவளைப்பதற்காக பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 60 நாய்கள் வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இரகசியமாக நாட்டிற்குக் கொண்டுவரப்படும் போதைப் பொருளை கைப்பற்றுவதற்கு இயலும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தவிர காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலும், மத்தள விமான நிலையத்திலும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் போதை வில்லைகளை கைப்பற்றுவதற்காக நாய்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment