ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ரிஷாட் பதியுதீன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 5, 2019

ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது - அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவுசெலவுத் திட்டம் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

கடந்த வருடம் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இருந்தபோதும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியும் காரணமாகும். இதனை படிப்பினையாகக் கொண்டு இந்த வரவுசெலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்கள், விவசாயிகளுக்கும் பல நன்மைகள் இருக்கின்றன.

அதேபோன்று வடக்கில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்ற தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரவுசெலவுத் திட்டம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment