மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். மாவனல்ல - பகல கடுகன்னாவ பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) இரவு பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து சுற்றுலாச் சென்ற பஸ்களில் ஒன்றே விபத்துக்குளாகியுள்ளது.
இன்று காலை அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்களில் இவர்கள் சுற்றுலா சென்றுள்ள நிலையில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment