கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்

இவ்வருடத்தின் மார்ச் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் சகல பாகங்களிலும் 8,904 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் பிரிவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்நிலையில், 2,017 டெங்கு நோயாளர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்த படியாக யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுவதுடன், அம்மாவட்டத்தில் 1,354 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 1,093 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே, எவருக்காவது காய்ச்சல் அறிகுறி தென்படின் கைவைத்தியத்தை தவிர்க்க வேண்டுமென்பதுடன், உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு, வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment