கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்

மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கொக்கேய்ன் மற்றும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

குறித்த 17 பேரையும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

நேற்று மதியம் 12 மணியளவில் மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து கொக்கேய்ன் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டிரந்தனர். 

மாத்தறை குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment