200 வாகனங்களுக்கு வீதிப் போக்குவரத்துத் தடை - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

200 வாகனங்களுக்கு வீதிப் போக்குவரத்துத் தடை

தென் மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவினால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 200 வாகனங்களுக்கு வீதிப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டன. 

இவ்வாகனங்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றதாகக் காணப்பட்டதையடுத்தே இத்தடை விதிக்கப்பட்டன. 

இவற்றுள் காலி மாவட்டத்தில் 80 வாகனங்கள், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலிருந்து தலா 60 வாகனங்களும் உள்ளடங்குகின்றன. 

தொழில்நுட்பக் கோளாறு, வாகன மின் சமிக்ஞை பழுதடைந்திருத்தல், கட்டமைப்புக் கோளாறு போன்ற பல்வேறு குறைபாடுகள் இவ்வாகனங்களில் காணப்பட்டதனாலேயே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளன. 

குறிப்பிட்ட வாகனங்களை திருத்தி கோளாறுகள் நீங்கிய பின் மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment