சுதந்திர இலங்கையின் 73 ஆவது பட்ஜட் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

சுதந்திர இலங்கையின் 73 ஆவது பட்ஜட்

சுதந்திர இலங்கையின் 73ஆவது வரவு செலவுத் - திட்டம் இன்று (05) செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இன்றைய நிதியமைச்சர் மங்கள சமரவீர சுதந்திர இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கடந்த 28 ஆம் திகதி தனது அரசியல் வாழ்வில் 30 ஆண்டைப் பூர்த்தி செய்துள்ளார். 

கடந்த வருடம் (2018) ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு - செலவுத் திட்டம் அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தடைப்பட்டது. நெருக்கடி நிலைக்கு தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்து இன்று நிதியமைச்சர் சமர்ப்பிக்கின்றார். 

இது நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது பட்ஜட் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

எம்.ஏ.எல். நிலாம்

No comments:

Post a Comment