கிளிநொச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் - News View

About Us

Add+Banner

Saturday, February 2, 2019

demo-image

கிளிநொச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

625.0.560.320.160.600.053.800.700.160.90+%25286%2529
போதைப் பொருட்களுக்கு எதிராகவும், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று 02-02-2019 கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் வரை சென்றடைந்தது. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கான மகஜரும் கையளிக்கப்பட்டது. 

போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதைப் பொருட்களிலிருந்து எம் மாணவர்களை பாதுகாப்போம், போதை அது சாவின் பாதை, வேண்டாம் போதைப் பொருள் வேண்டாம், போதைப் பொருளிலிருந்து எம் சமூகத்தை பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தவாறு பேரணி இடம்பெற்றது. 

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

கிளிநொச்சி நிபோஜன்
625.0.560.320.160.600.053.800.700.160.90+%25285%2529
625.0.560.320.160.600.053.800.700.160.90+%25283%2529
625.0.560.320.160.600.053.800.700.160.90+%25281%2529
625.0.560.320.160.600.053.800.700.160.90+%25284%2529
625.0.560.320.160.600.053.800.700.160.90+%25282%2529
625.0.560.320.160.600.053.800.700.160.90

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *