மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணிபுரிந்தபோது கடந்த வாரம் மரணமடைந்த இலங்கை இராணுவ வீரர்களுக்கு தலா 50,000 அமெரிக்க டொலர்களை அந்த நாடு நஷ்ட ஈடாக வழங்கவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ மேஜரும், இராணுவ வீரரொருவருமே பயங்கரவாதத் தாக்குதலொன்றில் மரணமடைந்துள்ளனர். அவர்களின் பூதவுடல்களை இலங்கைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கு சில நாட்கள் செல்லுமெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய இருவருக்கும் சிறுகாயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
அவர்களுக்கு மாலியிலுள்ள சிறந்த வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாலி அரசாங்கத்துக்கு எதிரான பயங்கரவாத கெரில்லா குழுவினர் பாதுகாப்பு வாகன அணி மீது இதற்கு முன்னரும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதலை எமது படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment