மாணவ சமூகத்திற்கு மத்தியில் உணவு பழக்கவழக்கங்கள் முறையற்ற விதத்தில் காணப்படுவதாலும் அதனால் பல்வேறு ஆபத்துக்களை மாணவ சமூகம் எதிர் நோக்குவதாலும் மாணவ, மாணவிகள் மத்தியில் அன்றாட உணவுப் பழக்கவழக்கம் தொடர்பாகவும், அதன் முறைகள் பற்றியும் விழிப்பூட்டும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அதிகாரி பணிமனையின் பிராந்திய உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கர்களான என்.தேவநேசன், ரீ.வரதராஜன், என்.விமலசேகரன் மற்றும் சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.இன்பராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு மனித வாழ்வில் அன்றாடம் எவ்வாறு உணவுகளை உட்கொள்ள வேண்டும் உணவு வகைகளை நாம் எவ்வாறான முறையில் தயார் செய்ய வேண்டும் என்பன பற்றியும், முறையற்ற விதத்தில் உணவுகளை உட்கொள்வதால் நாம் எதிர் நோக்கும் ஆபத்துக்கள் தொடர்பிலும் வீடியோக் காட்சிகளினூடாக விளக்கவுரைகள் நடாத்தப்பட்டது. இதில் ஏறாளமான மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment