இலங்கை மருத்துவ சபையின் (SLMC) தலைவர், பேராசிரியர் கொல்வின் குணரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்தான இராஜினாமா கடிதத்தை, நேற்று முன்தினம் (31) சுகாதார அமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராசிரியர் கார்லோ பொன்சேகாவின் ஐந்தரை வருட சேவையை அடுத்து, இலங்கை மருத்துவ சபையின் தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால், கடந்த வருடம் (2017) ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment