சுமார் 100 கிலோ கிராமிற்கும் அதிக நிறைகொண்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் மன்னார், ஒலுதொடுவாய் கடற்பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சளார், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த 100 கிலோகிராமிற்கும் அதிகமான கஞ்சாவை, சந்தேகநபர் 4 தோணிகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
39 வயதுடைய மன்னார் பெரியகர்சல் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, இன்றையதினம் (02) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மன்னார் பொலிசார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment