நாட்டில் இலவச சுகாதார சேவை உண்மையிலேயே சுதந்திரமாக செயற்படுகின்றது – ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 1, 2018

நாட்டில் இலவச சுகாதார சேவை உண்மையிலேயே சுதந்திரமாக செயற்படுகின்றது – ஜனாதிபதி

பல ஆண்டுகளாக போராடி, சேனக பிபிலே அவர்களின் மருத்துவ கொள்கைகளை தேசிய ஒளடத சட்டமாக ஏற்று, போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தி, நாட்டின் சுகாதார சேவையை பலப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பணிகள் சர்வதேசத்தின் பாராட்டினைப் பெற்றுள்ளது என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணைத்தலைவர் பதவி சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு வழங்கப்பட்டமையின் ஊடாக மேலும் உறுதியாகின்றது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டமையை முன்னிட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள், பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்களின் பங்குபற்றுதலில் நேற்று (31) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற 'சுவபதி அபிசேக்கய' வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இன்றைய செய்தித்தாள்களில் வெளியாகியிருந்த இருதய நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் நாமல் கமகேயின் பிரகடனம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது இருதய நோய்கள் காரணமாக ஏற்படும் நாளாந்த மரணங்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 வரை குறைத்தல் ஒரு சவாலாக சுகாதார துறையினரிடம் கையளிக்கப்படுகின்றது என தெரிவித்தார்.
இருதய நோய்கள் காரணமாக ஏற்படும் பெரும்பாலான மரணங்களுக்கு போதைப்பொருள், மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கமே காரணமாக அமைகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை இல்லாதொழிப்பதற்கும் குறைப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்புபோல் மேல் மட்டத்திலிருந்து எந்தவித தடைகளும் தற்போது சுகாதார அமைச்சருக்கு விடுக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

2018 ஜனவரி 08ஆம் திகதியின் பின்னரே நாட்டில் இலவச சுகாதார சேவை உண்மையிலேயே சுதந்திரமாக செயற்படுகின்றது என தெரிவித்த ஜனாதிபதி, சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் தீர்மானங்களின்போது மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் பொறுப்புக் கூறவேண்டிய நிலை தற்போது இல்லை என்பதுடன் சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்படும் சட்ட ஏற்பாடுகளும் சட்ட மூலங்களும் தற்போது திணைக்களத்தில் காணாமற் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பேராசிரியர் காலோ பொன்சேக்கா வைபவத்தில் தலைமை உரை ஆற்றியதுடன் பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி Dr. Razia Pendse ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment