தேனீ வளர்ப்பு - ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 1, 2018

தேனீ வளர்ப்பு - ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை

மிகவும் இலாபகரமான தொழிற்துறையாக கருதப்படும் தேனீ வளர்ப்பை மேற்படுத்துவதற்காக பாரிய வளத்தை இலங்கை கொண்டுள்ளது. 

இருப்பினும் தேனீ வளர்ப்பு தொடர்பாக விஞ்ஞான அறிவு இல்லாததினால் தற்பொழுது இலங்கையில் தேனீ வளர்ப்பு தொழில்துறை அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேனீ வளர்ப்பு தொழில்துறை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. அத்தோடு உள்ளுர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தேன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த விடயங்களை கவனத்திற்கொண்டு தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரண்டு இலட்சம் தேனீ அலகுகளை முதல் கட்டத்தின் கீழ் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் 1000 விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களுக்கு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக சுமார் 2 இலட்சம் பேருக்கு புதிய தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்துவதற்கும் வருமான வழிகளை எற்படுத்தும் நோக்கிலும் நவீன பயிற்சி மற்றும் ஆய்வு மத்திய நிலையம் தம்பேதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழிற்துறை அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த பரிந்துரையுடன் இதற்கான திட்டத்தை விவசாய அமைச்சினதும் சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கூட்டுத் திட்டமாக நடைமுறைபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment