வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘ஐ-ரோட்’ வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் ‘ஐ-ரோட்’ வேலைத்திட்டத்தின் கீழ் 800 கிலோ மீற்றர் தூரமான வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் அதனை துரிதமாக ஆரம்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
நெடுஞ்சாலகைள் இராஜாங்க அமைச்சில் நேற்று (31) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ‘ஐ-ரோட்’ வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் திருமதி. ஜெனீபர் வீரகோன் , இராஜாங்க அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றயீஸுட்டீன், இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள் குறித்த ஆராய்ந்ததோடு, ஐ-ரோட் திட்டத்தின் மூலம் அவற்றை அபிவிருத்தி செய்யுமாறும் அதற்கான பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறும் இதன்போது இராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதேவேளை, இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஹபரன தொடக்கம் நாவலடி வரையிலான வீதி நான்கு வழிப்பாதைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment