மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி விஜயம் - பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 2, 2018

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி விஜயம் - பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக உறுதி

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களுக்கு மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன், அப்பகுதி மக்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், ஒட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உப தவிசாளர் யூ.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான எஸ்.கிருபா, எஸ்.கிருபைராசா, எம்.பி.ஜௌபர், எம்.எச்.அமீர், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சசி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் சாளம்பச்சேனை மற்றும் வாகனேரி வீதிப்புனரமைப்பு வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாகனேரி, மைலந்தனை, சாளம்பச்சேனை, பொத்தானை, ஜப்பார் திடல் ஆகிய கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதியமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்கள் முன்வைத்த யானை வேலி, குடி நீர்ப்பிரச்சினை, வீதி மின் விளக்கு போன்ற பிரச்சினைகளைத் தீர்த்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

எஸ்.எம்.எம். முர்ஷித்

No comments:

Post a Comment