மண் ஒழுங்கைகளை கிறவல் வீதிகளாக மாற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயற்றிட்டத்திற்கமைய கோறளைப்பற்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பு முத்துமாரியம்மன் வீதியை அண்மித்துள்ள 40 வருடப்பழமை வாய்ந்த மண் ஒழுங்கைக்கும் கிறவலிடப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட பிரதித்தலைவருமான நா.திரவியம் ஜெயம் கலந்து கொண்டிருந்தனர்.
இதனால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர். அத்தோடு, விபுலானந்த வீதியை அண்மித்திருந்தும் 50 வருடமாகச் செப்பனிடப்படாமல் கிறவல் கண்டிராத கிருஸ்ணப்பிள்ளை வீதிக்கும் கிறவலிட்டு செப்பனிடப்பட்டது.
இவ்வாறு பல வருடங்களாக மண் ஒழுங்கைகளாகவும் செப்பனிடப்படாமலும் இருந்த வீதிகள் ஏன் முன்னைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் கண்ணுக்குத் தெரியாமல் போனதென அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.
எஸ்.எம்.எம். முர்ஷித்
No comments:
Post a Comment