கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நிருவாக செயற்குழு உறுப்பினர்களும் கல்முனை இஸ்லாமாபாத் கிராம சிவில் சமூக பிரதிநிதி களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்று 02.08.2018 நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின் அவர்களின் தலைமையில் மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நிருவாக செயற்க் குழுவினரும் இஸ்லாமாபாத் மக்கள் சார்பாக முன்னாள் கல்முனை மா நகர சபை உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான சகோதரர் பி. ரி. ஜமால் அவர்களின் தலைமையில் பிரதேச வாழ் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
மேற்படி கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
இஸ்லாமாபாத் பிரதேசம் கல்முனை நகரின் அடையாளம் அதன் இருப்பு போன்றவற்றிக்கு உறுதுணையாக விளங்கும் பிரதேசம் ராஜ கிரீடத்தில் இருக்கும் வைரம் போல ஜொலிக்க வேண்டிய நகரத்தை ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் தலைமைகள் கண்டும் காணாதது போல் செயற்படுவது கவலை அளிக்கின்றது.
சுனாமி அனர்த்ததின் பின்னர் எவ்விதமான சொல்லிக் கொள்ளும்படியான அபிவிருத்திக் பணிகளோ அல்லது கட்டுமானப் பணிகளோ உட் கட்டமைப்பு வசதிகளோ அங்கு ஏற்படுத்தப் படவில்லை என்பது கண்கூடாக அவதானிக்க முடியும்.
வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளாமல் பாதைகள் அனைத்தும் குன்றும் குழியுமாக காட்சி அளிப்பது வேதனை அளிப்பதோடு அங்கு காணப்படும் ஆயுர்வேத மருந்தகம் எவ்வித வசதிகள் இன்றி மக்களுக்கு சேவையாற்ற முடியாத நிலையில் உள்ளதாக அறியமுடிகின்றது.
தேர்தல் கால உண்டியல் போல வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கி விட்டு பாராமுகம் காட்டும் அரசியல் தலைமைகளின் கவனத்திற்கு இஸ்லாமாபாத் கிராமத்தின் நிலையை கொண்டு செல்வது தொடர்பாகவும் கட்சி சார் அரசியல் பேதங்களுக்கு அப்பால் இஸ்லாமாபாத் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு என்றும் முன்னிற்கும் என்றும் உறுதி அளித்ததோடு எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் பிரதேச வாழ் மக்களுடன் விசேட கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்த பட்டது.
இஸ்லாமாபாத் கிராமத்தின் குறைபாடுகள் தொடர்பில் எழுத்து மூலமான முறைப்பாடுகள் உரிய முறையில் சம்பந்தப் பட்ட அமைச்சுக்கள் அதிகாரிகளுக்கு விரைவாக அனுப்பப் படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்த பட்டது.
இறுதியாக கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பானது இதற்கு மேலதிகமாக கடந்த வாரம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் கௌரவ அலிசாஹிர் மௌலானா அவர்களிடம் இஸ்லாமாபாத் கிராமத்தில் நல்லிணக்கம் மூலம் மேற்கொள்ள வேண்டிய வீதி அபிவிருத்தி மற்றும் கடற்கரைப் பூங்கா தொடர்பில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு எழுத்துமூல வேண்டுகோள் விடுக்கப்பட்டது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த நகர்வுகள் தொடர்பிலும் பரிசீலனை செய்யப பட்டது.
முஹம்மது காமில்
No comments:
Post a Comment