முஸ்லிம் தனியார் திருத்த சட்டத்தில் மாற்றம் தேவை என்பது நீண்ட கால கோரிக்கை என முன்னாள் நீதி அமைச்சர் மெலிந்த மொரகொட கூறியிருப்பது பிழையான கருத்தாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் மிலிந்த மொரகொட அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவை சந்தித்த போது தான் முஸ்லிம் சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்துவதாகவும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை என சொன்ன அவர் இக்கோரிக்கையை யார் முன் வைத்தார் என சொல்லவில்லை.
இக்கோரிக்கையை இந்நாட்டின் உலமா சபையோ ஏனைய உலமாக்களோ முன் வைக்கவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளும் அவர்களின் பணத்துக்காக வாலாட்டும் சில பெண்களும் மேலும் சில சட்டத்தரணி பெண்களுமே முன் வைத்தனர்.
அதே போல் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்ட காலம் முதலே முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய மாற்றத்தையும் செய்யக்கூடாது என்பதை உலமா கட்சி வலியுறுத்துவதை மிலிந்த மொறகொட மறந்து விட்டார்.
மேற்படி சட்டத்தை மாற்றுவதற்கான குழுவில் ஜம்மிய்யதுல் உலமாவையும் சேர்க்கும்படி தான் சிபாரிசு செய்ததாகும் இதன் மூலம் ஜம்மிய்யதுல் உலமாவில் தனக்கிருக்கும் அக்கறையை காட்டியதாகவும் அவர் சொல்வது சிரிப்பை தருகிறது.
உண்மையில் ஜம்மியத்துல் உலமாவில் அவருக்கு அக்கறை இருக்குமாயின் இச்சட்டத்தை திருத்தும் படி கோரிக்கை வைக்காத உலமா சபையை கவுரவிக்கும் முகமாக இது சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியிருக்க வேண்டும்.
எம்மை பொறுத்தவரை சிங்கள கண்டிய திருமண சட்டத்தை திருத்தும் படியோ யாழ்ப்பாண சட்டத்தை திருத்தும் படி முஸ்லிம்கள் கோரவுமில்லை அதில் தலையிடவும் இல்லை. ஆனால் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றுவதற்கு வேறு மதத்தவர்கள் தலையிடுவது பாரிய சந்தேகத்தையும் ஆடு நணையுதெண்டு ஓநாய் அழுததையுமே காட்டுகிறது.
ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம். அதற்குரிய தேவையோ, கால சூழலோ இல்லை. இது விடயத்தில் ஆராயும் முழு தகுதியும் ஜம்மிய்யத்துல் உலமாவுக்கும் ஏனைய உலமாக்களுக்குமே உண்டு.
அதே போல் இது விடயம் பற்றி மாற்றுமத அரசியல்வாதிகளுடன் ஆலோசனை நடத்துவதை ஜம்மியத்துல் உலமா நிறுத்த வேண்டும். காரணம் இத்தகைய சந்திப்புகள் பற்றி சிங்கள மொழியில் திரித்து எழுதப்பட்டு இனவாதிகளுக்கு அவலாகவும் மாறலாம்.
முபாறக் அப்துல் மஜீத்
No comments:
Post a Comment