கல்முனைக்கான வளைகுடா அமையத்தின் அனுசரணையில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பு நடைமுறைப் படுத்திவரும் உயர்தரம் கற்கும் வறிய மற்றும் தேர்ச்சி மிகு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் மூன்றாம் கட்ட அங்குரார்ப்பான நிகழ்வு கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்திய கலாநிதி எம். எச். ரிஸ்பின் அவர்கள் தலைமை தாங்க அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம். இப்ராஹிம், அமைப்பின் செயற்குழு மற்றும் நிருவாக குழு உறுப்பினர்கள், கல்முனை க்கான வளைகுடா அமையத்தின் செயலாளர் முகம்மது அஜ்வத் மற்றும் அதன் பிரதிநிதிகள் புலமைப் பரிசில் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ரிஸ்பின் அவர்கள் உரையாற்றும் பொழுது கல்வியின் மகத்துவம் கல்வி கற்பதற்கான வழிமுறைகள் பரீட்சை எழுதும் வழிமுறைகள் எதிர்காலத்தில் கல்வியின் தரம் அதற்கேற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் கடல் கடந்து வாழும் சகோதரர்களின் பங்களிப்பு ,அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக தெளிவு படுத்தினார்.
மாணவ மாணவிகள் எதிர்காலம் அவர்கள் பயணிக்கும் பாதை என்ற தலைப்பில் கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசல் இமாமும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நலன்புரி செயலாளருமான மௌலவி யு.எல்.எம். இக்பால் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்.
கல்முனை க்கான வளைகுடா அமையத்தின் சார்பாக சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் உரையாற்றும் பொழுது மாணவர்களுக்கான புலமைப் பரிசில் நிதி வழங்கும் முறை அதற்காக அற்பணிப்புடன் பாடுபடும் சகோதரர்களின் பங்களிப்பு , கடல் கடந்து வாழும் கல்முனை சமூகத்தின் அற்பணிப்புகள் போன்றன தொடர்பாக உரையாற்றினார்.
இறுதியாக புலமைப் பரிசில் பயனாளி மாணவர்களுக்கான மாதாந்த உதவித் தொகை தெரிவு செய்யப்பட்ட 26 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி உதவித் தொகை உயிரியல் மற்றும் பௌதீக வியல் கற்கும் மாணவர்களுக்காக மாதாந்தம் ரூபா.4000.00 வீதமும் வர்த்தகம், கலை மற்றும் தொழினுட்ப பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு ரூபா.2500.00 வீதமும் வழங்கி வைக்கப்பட்டு சலவாத்துடன் மேற்படி நிகழ்வு நிறைவு பெற்றது.
முஹம்மது காமில்
No comments:
Post a Comment