மோதறை, முத்துவெல்ல மாவத்தையிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 62 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான காயடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மரணமடைந்த நபர், மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான கோபால பிள்ளை பாலச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, தேடப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றங்களை மேற்கொள்ளும் சந்தேகநபர் ஒருவரின் தந்தை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment