சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த இந்தியர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
இன்று (03) காலை துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து ஒரு கிலோ கிராம் எடை கொண்ட இரண்டு தங்கக் கட்டிகள் மற்றும் அரை கிலோ (513.41 g) தங்க நகைகள் உள்ளிட்ட சுமார் 2 1/2 கிலோ கிராம் (2513.41g) தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நகைகளின் பெறுமதி ரூபா ஒரு கோடியே 61 இலட்சத்து 646 (ரூ. 16,100,646) என மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகநபர், மோட்டார் வாகனம் திருத்தும் உபகரண பொதி ஒன்றினுள் குறித்த தங்கங்களை மறைத்துவைத்து கொண்டு வந்துள்ள நிலையில், கட்டுநாயக்கா சுங்க அதிகாரிகளின் சோதனையின்போது அவை மீட்கப்பட்டுள்ளதாக சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
No comments:
Post a Comment