ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டம் கல்குடாப் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களால் இத்திட்டம் புதன்கிழமை இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பாரிய இயக்கமான இக்கட்சியின் ஆல விரூட்சத்தின் விழுதுகளாகவும் கிளைகளாகவும் இந்த நாட்டில் பரந்து விரிந்து வாழும் போராளிகளை கட்சியுடன் இணைக்கும் ஓர் உறவுப் பிணைப்பாக வீட்டுக்கு வீடு மரம் என்ற வேலைத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
இத்திட்டத்தை செயற்படுத்துவதுனூடாக பலம் வாய்ந்த இக் கட்சியினை மென்மேலும் பலப்படுத்தவும் ஆரம்ப கால போராளிகள் உட்பட இளைஞர்கள், இளைஞர் யுவதிகள், தாய்மார்கள் அனைவரையும் இந்த இயக்கத்துடன் ஒன்று சேர்க்கக்கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல். பதுருதீன், எஸ்.ஏ. அன்வர் (ஆசிரியர்), ஏ.ஜீ. அஸீசுல் றஹீம் (ஆசிரியர்), மௌலவி. எம்.ஐ.ஹாமித், எம்.ஐ.எம். இம்ந்தியாஸ், பிரதேச சபை வேட்பாளர் ஆர். கலீலுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment