ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வு இரு அமர்வுகளாக நடைபெறும்.
முதல் அமர்வில் செயலாளர், பொருளாளர் ஆகியோரின் ஆண்டறிக்கை மற்றும் யாப்புச் சீர்திருத்தம் இருப்பின் அதுவும் வாசிக்கப்படும். பின்னர் செயற்குழுவுக்கான நியமனம் மற்றும் பேராளர்களின் கருத்துரைகள் என்பன இடம்பெறும்.
பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில், புதிய உயர்பீட உறுப்பினர்கள் பற்றி விபரங்கள் அறிவிக்கப்படுவதுடன், மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரஃபின் நினைவுகூரலும் தேசியத் தலைவரின் பிரதான உரையும் இடம்பெறும்.
No comments:
Post a Comment