எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளை 2010 இல் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை மீறி வங்கிகளுக்கு வழங்கிய விடயம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் 53 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 43.63% பங்குகளே இவ்வாறு அமைச்சரவைத் தீர்மானத்தையும் மீறி வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளன.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைப் பங்குகளை இலங்கை வங்கிக்கு பெற்றுக் கொடுக்குமாறு 2010 இல் அமைச்சரவை இருமுறை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் இதற்கும் மேலதிகமாக மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஊழியர் சேமலாப நிதி என்பவற்றுக்கும் இப் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன .இவ்விடயம் தொடர்பாகவே ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று (01) ஸ்ரீலங்கன் விமான சேவையின் செயலாளரான டெல்ரின் திருக்குமார் ஆவணங்களை முன்வைத்து வழங்கிய சாட்சியங்களில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
அவ்வேளையில் ஸ்ரீலங்கன் விமானசேவையின் தலைவராக நிஸாந்த விக்ரமசிங்க இருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் அவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணையை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நீல் உனம்புவ முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர் சபை முடிவுக்கு அமைய இலங்கை வங்கிக்கு பன்னிரண்டு மில்லியன் பங்குகளை பெற்று கொடுத்ததுடன், மக்கள் வங்கிக்கு நான்கு மில்லியன் பங்குகள், தேசிய சேமிப்பு வங்கிக்கு நான்கு மில்லியன் பங்குகள், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு ஒரு மில்லியன் பங்குகளும் அமைச்சரவையின் தீர்மானங்களை மீறி வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை வங்கிக்கு 53 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பங்குகளை வழங்க வேண்டுமென 2010 மே 04 இலும் ஜூன் 01 இலும் அமைச்சரவை அங்கீகாரங்களை வழங்கியுள்ளன. இத்தீர்மானங்களை மீறியே இப்பங்குகள் வழங்குகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment