நல்லாட்சி அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை - அமைச்சர் அஜித்.பி பெரேரா - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

நல்லாட்சி அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா பிரேரணை - அமைச்சர் அஜித்.பி பெரேரா

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரானது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக எரிசக்தி மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித்.பி பெரேரா தெரிவித்தார்.

ஒரே குடும்ப உறுப்பினர்கள் போல அரசாங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க விருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தால் அமைக்கப்படவிருக்கும் ஊழலுக்கு எதிரான உயர்நீதிமன்றம் குறித்து ஏற்பட்ட அச்சத்தினாலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலம் ஏப்ரல் 5ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. 

இதற்குப் பயந்து ஒரு நாள் முன்னரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஒப்பிடுகையில் நாட்டில் வரி மூலமான வருமானம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. 

நாட்டில் வரியைச் செலுத்தக்கூடிய அனைவரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும். இதற்கேற்ற வகையில் புதிய சட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் உள்ள நேரடி மற்றும் மறைமுக வரி மூலமான வருமானம் 60க்கும் 80 சதவீதத்திற்கும் இடைப்பட்டதாக முன்னெடுப்பதே புதிய சட்டத்தின் இலக்காகும்.

2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு இறைவரி திணைக்களம் தற்பொழுது திறைசேரியுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய வரித்திருத்தங்களின் பிரகாரம் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் வரி நேற்று முதல் திருத்தப்பட்டுள்ளது.

7 இலட்சம் வருடாந்த சம்பளம் பெறும் ஒருவரிடம் இதுவரை வரி அறவிடப்பட்டது. புதிய வரி திருத்தத்தின் பிரகாரம் வருடாந்த சம்பளம் 12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12 இலட்சத்திலிருந்து அதிகரிக்கும் ஒவ்வொரு 6 இலட்சத்திற்கும் 4 வீத வரி செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கை பணியாளர்கள் வங்கிகளில் வைப்பிலிடும் சேமிப்புப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டிக்கு 5 வீத வரி அறவிடப்படவுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வருமானத்தில் 15 இலட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தொழில் புரியும் பணியாளர்கள் அங்கிருந்து தமது உறவினர்களுக்கு அனுப்பும் பணத்திற்கு எவ்வித வரியும் அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்து.

மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment