பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாக வெற்றிபெறும் என கூட்டு எதிரணியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அடுத்த 4 ஆம் திகதி நாட்டில் ஓர் பாரிய அரசியல் மாற்றத்தை காணலாம், அதற்கு தமக்கு அனைத்து பக்கங்களில் இருந்து ஆதரவு கிடைத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இந்த அரசாங்கத்தின் கடந்த 3 ஆண்டுகளில் விவசாயம், தொழிற்துறைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள அதே சமையம் பாரிய ஊழல் மோசடியான மத்தியங்கி பிணை, முறிகள் கொடுக்கல் வாங்கலில் பாரிய கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றியடையச் செய்யவதே ஒரே வழி என கூறினார்.
No comments:
Post a Comment