ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவ பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த, அவரது 16 வயதுடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவரும் இவர்களுக்கு பாடசாலை செல்லும் போது காதல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 27 ஆம் திகதி சந்தேக நபரான காதலன், குறித்த சிறுமியை பாழடைந்த கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறுமியை பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காதலனான சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment