சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர் அடையாளம் தெரிந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் தாக்குதலில் பலியான பிரிட்டன் வீரர் அடையாளம் தெரிந்தது

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் குண்டுவெடிப்பில் பலியான இருவரில் பிரிட்டன் ராணுவ வீரர் யார்? என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதுதவிர, ஐ.எஸ். அமைப்பினரின் கைவசமுள்ள சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அவர்களுக்கெதிராக நடாத்தப்படுகின்ற தாக்குதல்களில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ்.அமைப்பினர் புதைத்து வைத்திருந்த சாலையோர குண்டு கடந்த 29-3-2018 அன்று வெடித்து சிதறியதில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ராணுவ வீரரும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவத்தில் மரணம் அடைந்த பிரிட்டன் ராணுவ வீரர் யார்? என்ற அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.

சிரியா குண்டுவெடிப்பில் பிரிட்டன் ராணுவத்தின் துணைப்படையை சேர்ந்த சார்ஜன்ட் மேட்டான்றோ உயிரிழந்ததாக சிரியாவில் முகாமிட்டுள்ள பிரிட்டன் நாட்டு ராணுவப்படை பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வீரமும் திறமையும் பெற்ற மேட்டான்றோ, சிறப்பான முறையில் பணியாற்றியதுடன் அதிகமான நகைச்சுவை உணர்வும் கொண்டவராக விளங்கினார். முதல்தரமான வீரராக தனது தாய்நாட்டுக்கு கடமையாற்றுவதை கொள்கையாக கொண்டிருந்த அவர், மிகப்பெரிய சவாலான சாகசங்களில் வெற்றிபெற்று சாதிப்பதில் உறுதியாக இருந்தார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் மேட்டான்றோ விட்டுச்சென்ற கடமையை நாங்கள் செய்து முடிப்போம் என அவரது சகவீரர்களும், உயரதிகாரிகளும் இரங்கல் செய்தியாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment