நாட்டின் பணத்தையும் வளங்களையும் செலவழித்து வருடக்கணக்காக இழுபட்டுச் செல்லக் கூடிய வகையில் சந்தேக நபரொருவருக்கெதிராக வழக்குத் தொடுப்பதே குற்றச் செயலைத் தடுப்பதற்கான ஒரேயொரு முறையாகுமென இலங்கையில் வாழ்ந்து வரும் நாம் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
பிரித்தானியர்களிடமிருந்து நாம் உள்வாங்கிக் கொண்டுள்ள முறைமை இதுவேயாகும். எது எப்படியிருப்பினும், நாம் தடுப்பு முறைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி குற்றச்செயல் நிகழ்வதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் எமது சட்ட முறைமையானது கொண்டிருக்காமலேயே உள்ளது.
இத்தகைய தடுப்பு முறைகள் சட்டக் கல்லூரிகளில் கூட கற்பிக்கப்படுவதில்லை. குற்றமிழைப்போரைக் கடுமையாகத் தண்டித்து விட்டால் ஏனையோர் கவனமாக இருப்பதுடன் குற்றங்களைப் புரிவதிலிருந்து விலகியிருப்பரென்ற கருத்து எங்கள் மத்தியில் நிலவுகின்றது.
எவ்வாறிருப்பினும், இதன் போக்குகள் தற்போது மாற்றமடைந்து வருவதுடன், குற்றச் செயல்கள் நிகழும்வரை காத்திருப்பதற்குப் பதிலாக அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது உலகம் கண்டவண்ணமுள்ளது.
மேற்கண்டவாறு தெரிவித்திருப்பது வேறு யாருமல்ல. இலஞ்சம் அல்லது ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமானே ஆவார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த வருடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் 51 பேர் கைது செய்யப்பட்ட அதேசமயம், மேற்படி ஆணைக்குழு 73 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தது. கடந்த ஆணைக்குழுவுக்கு மொத்தமாக 2,768 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதே வருடம் இன்றுவரை 605 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் ஆணைக்குழு கிட்டத்தட்ட ஒன்பது வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 11 திடீர் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
எது எப்படியிருந்த போதிலும், இலஞ்சம் வாக்குவோரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்து வருகின்றதென இலஞ்சம் வாங்குவோர் அறிந்துள்ள போதிலும், மேலதிக பணத்தை எவ்வழியிலேனும் சம்பாதிக்கும் ஆசையோ அவர்களை இன்னமும் விட்டுப்போவதாக இல்லை.
இதற்கிடையில், இலஞ்சம் அல்லது ஊழல் மோசடியில் ஈடுபடுவோரைத் தண்டிப்பதில் இனங்காணப்பட்டுள்ள பிரதான காரணங்களுள் ஒன்றாக வழக்குத் தொடுப்பதில் ஏற்படும் கால தாமதம் காணப்படுகின்றது. இதற்கு முன்னரெல்லாம், இலஞ்சம் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றக் கட்டமைப்பில் கீழ் நிலையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலேயே விசாரிக்கப்பட்டு வந்தன.
அதிகளவிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதனால், இத்தகைய வழக்குகள் வழமையாக தேங்கிக் கிடக்கின்றன. ஆயினும், இந்த வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிப்பதற்கு வசதியாக, சட்டங்கள் சிலவற்றை மீளாய்வு செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்களில் குறித்த வண்ணமுள்ள வழக்குகளை தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு எடுத்துள்ளது.
கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகளில் 20 வருடங்களுக்கு மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகளும் அடங்கியுள்ளன. ஆகையால், இந்தப் பொறிமுறையில் தீவிர மாற்றமொன்றின் அவசியம் குறித்து ஜனாதிபதி கூட வலியுறுத்தியுள்ளார்.
1980 ஆம் ஆண்டின் இலஞ்சம் ஒழிப்புச் சட்டம் சம்பந்தமான சட்டங்களில் அதிகமானவை திருத்தங்களின் ஊடாக மீளாய்வு செய்யப்படவுள்ளன. இந்தத் திருத்தங்கள் ஊடாக, சட்டக் குறைபாடுகள் காரணமாக குற்றமிழைப்போர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதுடன் தேவைகளை நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்க அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே காணப்படும் கண்ணோடு கண் கதைபேசும் நிலையே இந்த நாட்டில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்குப் பிரதான காரணமாகும். காரியத்தை செய்விப்பதற்கென அந்தத் திணைக்களத்திற்கு வருகைதரும் சாதாரண பொது மக்களுக்கு முறைமை குறித்த அறிவு கிடையாதென அறிந்து வைத்திருக்கும் அதிகாரி, சாதாரண பொதுமகன் தனது காரியத்தை செய்விப்பதற்கென அவரை இலஞ்சமொன்றை வழங்க வைக்கும் வகையில் குறித்த செயல்முறையை வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றார்.
அரச நிறுவன அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான நேரடித் தொடர்பைக் குறைப்பதன் மூலம் இதனைத் தடுத்து நிறுத்த முடியும். இத்தகைய இலஞ்சம் அல்லது ஊழல் குறித்த வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு அதிக ஈடுபாடு காட்டப்பட்டு வருகின்ற அதே சமயத்தில், தாங்கள் எதிர்நோக்கி வரும் மிகப் பெரிய தடைகளில் ஒன்றாக விளங்குவது, பதவியணியினரைப் பணிக்கமர்த்துவதற்கான போதிய இடவசதி இன்மையே ஆகுமெனவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் விசனம் தெரிவித்தார்.
எமக்கு 50 சுயாதின விசாரணையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ள போதிலும், போதிய இடவசதியில்லாத நிலையில் அவர்களைப் பணிக்கமர்த்துவதென்பது பெரும் சவாலாகும். இதற்கு முன்னரும், கட்டடததின் ஒரு பிரிவு இடிந்து விழுந்தபோது, எமது ஊழியர்களால் சிலரை நான் பழைய ஆட்பதிவுத் திணைக்களக் காரியாலயத்தில் பணியாற்ற வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள், ஊழல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடியுள்ள நாடுகளாக விளங்குகின்றமை பரம இரகசியமல்ல. அவை அத்தகைய ஊழல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் முறையொன்றை பிரதானமாக, இலஞ்சமும் ஊழலும் தவறான செயல்கள் என்பதை நாட்டு மக்களின் மனங்களின் மனங்களில் பதில் வைப்பதன் மூலம் செயற்படுத்தி வருகின்றன. ஒரேயொரு முறை மட்டும் இதனை ஏற்றிக்கொள்ளவும் தாண்டவமாடும் ஊழல் பேயின் கோரப்பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு எம்மால் இயலக்கூடியதாக இருக்குமென்ற பொறுப்புணர்வுடன் செயற்படவும் நாம் கற்றுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment