வசந்தம் தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளரும், பிரபல அறிவிப்பாளருமாகிய இர்பான் முகம்மத் பயணித்த கார் நேற்று முன்தினம் தம்புள்ளையில் விபத்துக்குள்ளாகி அவரும் அவருடைய மனைவியும் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் தீயாய் பரவியதை நாமனைவரும் அறியக் கூடியதாய் இருந்தது.
விபத்துக்குள்ளான இர்பான் முகம்மத்தின் விபத்து தொடர்பான உண்மை நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சி நேர்கள் நேற்றைய (31) வசந்தத்தின் எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பிரதான செய்தியினை எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், குறித்த செய்தியில் வேறிடங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பில் வெளியிட்ட வசந்தம் தொலைக்காட்சி. ஊடகவியலாளர் இர்பான் முகம்மத்தின் விபத்து தொடர்பான செய்தியினை ஒளிபரப்புச் செய்யாததனால் நேயர்கள் ஏமாற்றத்துடன் காணப்பட்டதாக பலர் தங்களுடைய கருத்துக்களை கவலையோடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment