ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான் அமைப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ஐ.எஸ். அமைப்பினர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான் அமைப்பினருக்கும் இடையேயான உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, ஐ.எஸ். அமைப்பினர் பல இடங்களில் கால் பதித்து உள்ளனர். அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்து உள்ள ஹஸ்கா மினா மாவட்டத்திலும் ஐ.எஸ். அமைப்பினர் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
அந்த வகையில் அங்கு உள்ள போலீஸ் சோதனைச்சாவடி ஒன்றின்மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் தொடுத்தனர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டபோது, அங்கிருந்த போலீஸ் படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ஐ.எஸ். அமைப்பினர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் ஹஸ்ரத் உசேன் மாஷ்ரிக்வால் கூறும்போது, “ஹஸ்கா மினா மாவட்டத்தில் தடம் பதிக்கும் எண்ணத்தில்தான் இந்த தாக்குதலை ஐ.எஸ். அமைப்பினர் நடத்த முயற்சித்தனர். ஆனால் அதை போலீஸ் படையினர் வெற்றிகரமாக முறியடித்து விட்டனர்” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment