21வது பொதுநலவாய விளையாட்டு விழா புதன் கிழமை - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

21வது பொதுநலவாய விளையாட்டு விழா புதன் கிழமை

அவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ட் நகரில் 4ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் பொதுநலவாய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் 21ஆவது விளையாட்டு விழாவில் 71 நாடுகளிலிருந்து 18 பிரிவுகளில் 278 விளையாட்டுக்களில் 10000க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்குகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவை 2 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும் தொலைக்காட்சி மூலமும் கண்டுகளிக்கவுள்ளனர். அந்த வகையில் உலக விளையாட்டு விழா வரலாற்றில் 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு அடுத்தபடியான பெரும் விளையாட்டு விழாவாக இது கருதப்படுகிறது. இம்முறை 23 பிரிவுகளில் பரா ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 

இலங்கையும் போட்டியை நடத்த விண்ணப்பித்திருந்து தோல்வியடைந்த 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழா 5வது முறையாக அவஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. இதற்கு முன்பு 1939ஆம் ஆண்டு சிட்னியிலும், 1862 பேர்த் நகரிலும் 1982 பிரிஸ்பேனிலும், 2006ம் ஆண்டு மெல்பேர்ன் நகரிலும் நடைபெற்றது. 

இம்முறை இவ்விழாவுக்கு இலங்கையிலிருந்து 13 விளையாட்டுப் பிரிவுகளுக்காக 85 வீர வீராங்கனைகளும், பயிற்சியாளர்கள் உட்பட 40 அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் கூடுதலாக மெய்வல்லுனர் பிரிவில் 13 வீர வீராங்கனைகள் இம்முறை இவ்விளையாட்டு விழாவில் பங்குகொள்கின்றனர். 

ஆண்களுக்கான ரக்பி அணியில் 12 வீரர்களும், பளுதூக்குதல் பிரிவில் 11 வீர. வீராங்கனைகளும், பெட்மின்டன் போட்டிகளுக்கு 8 வீரர்களும், நீச்சல் போட்டிகளுக்கு 6 பேரும், குத்துச்சண்டை 6 பேர் மேசைப்பந்து விளையாட்டுக்காக 6 பேர், ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்காக 5 பேரும், குறிபார்த்துச் சுடுதல் 3 பேரும், தலையனைபோர் 3 வீரர்களும், சைக்கிலோட்டம், ஸ்கொஸ் போட்டிகளுக்கு தலா 3 பேர் வீதம் இம்முறை போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். 

1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின் முதல் தடவையாக 1958ம் ஆண்டிலேயே குழுவொன்று இவ் விளையாட்டு விழாவில் பங்குபற்றியது. அதற்கு முன் 1936 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற 6வது விளையாட்டு விழாவில் முதலாவதாக இலங்கையின் சார்பில் பெனி ஹென்ரிக்ஸ் என்பவர் பொக்சிங் விளையாட்டில் முதல் தங்கப்பதக்கதைப் பெற்றார். 

மெய்வல்லுனர் பிரிவில் முதல் தஙக்கப்பதக்கத்தை 1950ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஒக்லாந்தில் நடைபெற்ற 400 மீற்றர் தடைதாண்டியோட்டத்தில் டங்கன் வையிட் பெற்றுக்கொண்டார். 1994ஆம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரைபள் பிரிவில் புஷ்பமாலி ராமநாயக்கவும், மாலி விக்கிரமசிங்கவும் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டனர். 

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இதுவரை இலங்கை 4 தங்கப்பதக்கங்களும், 7 வெள்ளிப்பதக்கங்களையும், 4 வெண்கலப்பதக்கங்கள் அடங்களாக மொதமாக 15 பதக்கங்களையே பெற்றுள்ளது. 

இதேவேளை 1994ம் ஆண்டு கனடா விக்டோரியா நகரில் நடைபெற்ற விளையாட்டு விழாவின் போது இலங்கைக் குழு 1 தங்கப்பதக்கம், 1 வெள்ளிப்பதக்கம் பெற்று 48 நாடுகள் பங்குபற்றிய அவ்விழாவில் இலங்கை அணி 16 இடத்தைப் பெற்றது. பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக் குழு பெற்ற சிறந்த நிலையாகவும் இது பதிவாகியுள்ளது.

கடைசியாக இலங்கை சார்பில் கடந்த 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 16வது பொதுநலவாய விளையாட்டு விழாவின் போது பளுதூக்கும் வீரர் சிந்தக்க தங்கப் பதக்கமொன்றை பெற்றுக் கொடுத்திருந்தார். இம்முறையும் இவர் பதக்கமொன்றை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரே இம்முறை இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார். நீச்சல் வீரர் மெத்தியூ அபேசிங்கவும் பெரும் எதிர்பார்ப்புடன் இம்முறை அவுஸ்திரேலியவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். 

கடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்த இவர் அண்மையில் ,அமெரிக்காவில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியொன்றில் தனது சிறந்த காலமான 46.63 பதிவு செய்து வெற்றி பெற்றிருந்தார். இமமுறை அவுஸ்திரேலியாவில் நடைபெறும் 21வது கொமன்வெல்த் போடிகளிலும் ஒரு பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்போடு களமிறங்குகிறார்.

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 4ம் திகதி ஆரம்பமாகும் 21வது விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர், பெட்மின்டன், பொக்சிங், சைக்கிளோட்டம், ஜிம்னாஸ்டிக், ரக்பி, நீச்சல், குறிபார்த்து சுடுதல், பளுதூக்குதல், ரெஸ்லிங், கடற்கரை கைப்பந்தாட்டம், ஸ்கொஸ், மேசைப்பந்து என இம்முறைதான் கூடுதலான பிரிவுகளில் போட்டியிடவுள்ளதால் இம்முறை இலங்கை அணி பதக்கங்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்முறை போட்டிகளில் பங்கு கொள்ள அவுஸ்திரேலிய சென்றுள்ள வீர வீராங்கனைகள் வருமாறு-

நீச்சல்
வெரந் த சில்வா. மெத்திவ் அபேசிங்க, அகலங்க பீரிஸ், கயில் அபேசிங்க, வினோலி களுஆரச்சி, டில்ருக்ஷி பெரேரா, சஹன் பீரிஸ்.

மெய்வல்லுநர்
மஞ்சுல குமார, சம்பத் ரணசிங்க, வினோஜ் சுரங்ஜய, ஹிமாஸ அஷான், ஷெஜான் அபேபிட்டிய, மொஹம்மட் அஷ்ரப், சுமேஷ் லக்ஷித, ஜானக பிரசாத் விமலசிரி, நிமாலி லியனாரச்சி, கயன்திகா அபேரத்ன, நதீஷா லேகம்கே, ஹிருனி விஜேரத்ன, ருமேஷிகாரத்நாயக்க

பெட்மின்டன்
புவனேக குணதிலக்க, தினுக கருனாரத்ன, நிலூக கருணாரத்ன, சசின் டயஸ், திலினி ஹேன்தஹேவா, கவிந்தி இஷாதிகா, மடூஷிகா டில்ருக்ஷி, ஹஷுனி அம்பலன்கொட.

பீச் வொலிபோல் 
அசங்க குமார, மலிந்த சாசா 

பொக்சிங் 
இஷான் சஞ்ஜீவ, நிவங்க சந்தருவன், தினூதி துஷான், அனுஷா தில்ருக்ஷி, துலானி அனுராத, கேஷானி ஹங்ஷிகா. 

சைக்கிளோட்டம் 
அனிஷ்க தில்ருவன், ஷாமிக சதுன் 

ஜிம்னாஸ்டிக்
ரித்மா சமன்மலி, அமாயா சிதுமினி, ஷதுரி அபேசூரிய, டில்ஷான்கவின், மேரி சுசானா. 

ரக்பி
தயான் சந்திரதாச, மிஹிரான் முதுதந்திரி, ரொமேஷ் த சில்வா, ஓமல்க குணரத்ன, ஷால்ஸ் திசாநாயக்க, ஸ்ரீநாத் சூரியபண்டார, தரிந்து ரத்வத்தே, கவிந்து பெரேரா, அனுருந்த வில்வர, ரிச்சர்ட் தர்மபால, டனுஷ்க ரஞ்சன், நவின் லெவன்ஜித்

சுடுதல்
டினேஷ் பர்னாந்து, உபுல் விஜேரத்ன, சதுனி பெரேரா 

ஸ்கோஸ்
ரவிந்து லக்சிரி, மிஹிலியா மெத்சரனி

மேசைபந்து 
உதய ரணசிங்க, ரொஷான் சிறிசேன, நிர்மல ஜயசிங்க, இஷாரா மதுரங்கி, ஹங்சனி பியுமிலா, ஹெரன்தி வருஷ விதான, 

பளு தூக்குதல் 
சதுரங்க லக்மால், விராஜ் குமார, இந்திக சதுரங்க, சந்தன கீதால் விதானகே, ஷான்யா மதுஷங்க, சமந்த அபேவிக்ரம, உஷான் வருண, தினூஷா ஹங்ஷனி, ஷமரி மென்டிஸ், நதீஷானி சந்தமாலி, சதுரிகா பிரியந்தி மல்லவரபொர, டிவோசான் பெர்னாந்து, சமன் ஹெட்டிகே, தீபிகா தில்ஹானி குமாரி. 

எம். எஸ் எம். ஹில்மி

No comments:

Post a Comment