நிலைவரங்களை நேரில் அறிய அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அம்பாறை செல்கிறார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

நிலைவரங்களை நேரில் அறிய அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அம்பாறை செல்கிறார் ஜனாதிபதி

அம்பாறை நகரில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் நேரில் சென்று அறிவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று காலை அம்பாறை செல்கின்றார் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன.

நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியான அம்பாறைக்கு செல்லவுள்ளார்.

அம்பாறை நகரில் ஏற்பட்ட மோதலால் குறித்த பகுதியில் இருந்த உணவகங்கள், ஜும் ஆப் பள்ளிவாசல் ஆகியன தாக்குதலுக்குள்ளாகின.

சம்பவத்தையடுத்து பொலிஸார் 5 சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்த நிலையில் குறித்த ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் நிலைமைகளை நேரில் சென்று அறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று காலை அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதிக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment